2,500 பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டா
ஷெனாய் நகர், சென்னை மாவட்டத்தில், 14 சட்டசபை தொகுதிக்கு உட்பட, 2,500 பயனாளிகளுக்கு, வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி, செனாய் நகரில் நேற்று நடந்தது.
நிகழ்வில், துணை முதல்வர் உதயநிதி, பயனாளிகளுக்கு, பட்டா சான்றிதழை வழங்கினார்.
அப்போது பேசிய உதயநிதி, ”திராவிட இயக்கத்தால், கல்வி, வேலைவாய்ப்பில், தமிழகம் தன்னிறைவு நிலையை அடைந்திருக்கிறது. உங்கள் பிள்ளைகளை, பட்டதாரிகளாக்கிய திராவிட மாடல், இன்று உங்களை பட்டாதாரராக ஆக்கியுள்ளது. இதுவரை, 12.29 லட்சம் பேருக்கு பட்டாக்கள் வழங்கி உள்ளோம்,” என்றார்.
நிகழ்வில், அமைச்சர்கள் ராமச்சந்திரன், சேகர்பாபு, சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.