பெசன்ட நகரில் நாளை கிருஷ்ணா ரத யாத்திரை
சென்னை,:ஹரே கிருஷ்ணா இயக்கம் சார்பில், சென்னையில் 14ம் ஆண்டு ரத யாத்திரை, நாளை நடக்கிறது.
பெசன்ட நகர் கடற்கரையில், மாலை 5:30 மணிக்கு துவங்கும் ரத யாத்திரை மகாத்மா காந்தி சாலை, இந்திரா நகர், திருவான்மியூர் வீதிகள் வழியாக, இரவு 9:00 மணிக்கு திருவான்மியூர் வால்மீகி நகரில் உள்ள தட்சிண துவாரகா தாம் என்ற இடத்தில் நிறைவடையும்.
ரத யாத்திரையில், 500 பக்தர்கள் பங்கேற்க உள்ளனர். யாத்திரையின்போது, 45,000 பேருக்கு பிரசாதம் வழங்கப்பட உள்ளது.
ரத யாத்திரையில் கோலாட்டம், ஒயிலாட்டம், கரகம், மயிலாட்டம், தப்பாட்டம், புலியாட்டம், கதகளி போன்ற பாரம்பரிய நிகழ்ச்சிகள், கலைஞர்களால் நடத்தப்பட உள்ளன.