கத்தியை காட்டி ரகளை மூன்று ரவுடிகள் கைது
புளியந்தோப்பு, புளியந்தோப்பு கன்னிகாபுரம் வாசுகி நகர் பகுதியை சேர்ந்தவர் பார்வதி, 45. இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த போது, மூவர் மது போதையில் வாகனங்கள் மற்றும் வீடுகளை அடித்து சேதப்படுத்தி, அவ்வழியாக செல்லும் நபர்களை கத்தியை காட்டி மிரட்டி ரகளையில் ஈடுபட்டனர்.
புளியந்தோப்பு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, மூவரையும் மடக்கிப் பிடித்தனர். அவர்களிடமிருந்து, இரண்டு கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன.
அதில், புளியந்தோப்பு, கன்னிகாபுரம் பகுதியைச் சேர்ந்த சஞ்சய், 20, ‘லொடங்கு’ சீனிவாசன், 22, மற்றும் அஜய், 23, என்பது தெரிந்தது. மூவரும் புளியந்தோப்பு பகுதியில் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது. மூவரையும் கைது செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.