கிரெடாய் பேர் ப்ரோ’வில் ரூ.363 கோடிக்கு விற்பனை
சென்னை, ‘கிரெடாய்’ சென்னை பிரிவு சார்பில், சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், இம்மாதம், 14ம் தேதி முதல், 16ம் தேதி வரை, 17வது, ‘பேர்ப்ரோ’ 2025 கண்காட்சி நடந்தது. இதற்கு, ஏராளமான பார்வையாளர்கள் வந்தனர்.
இதில், வீட்டு மனை மற்றும் குடியிருப்புகளுக்கான முன்பதிவு, எப்போதும் இல்லாத வகையில் பதிவாகியுள்ளது.
வீடு வாங்குபவர் மற்றும் முதலீட்டாளர்களிடம் கிடைத்த அமோக வரவேற்பால், தென் மாநிலங்களின் மிகப்பெரிய மற்றும் நம்பகமான ரியல் எஸ்டேட் கண்காட்சியாக மாறியுள்ளது.
மூன்று நாட்கள் நடந்த கண்காட்சிக்கு, 44,712 பார்வையாளர்கள் வந்ததுடன், 363 கோடி ரூபாய் மதிப்புள்ள, 385 சொத்துக்களை வாங்கியுள்ளனர்.
அதிக விற்பனை என்பது வாடிக்கையாளர்களிடம், வீட்டு வசதிக்கான தேவை அதிகரித்துள்ளதை காட்டுவதாக, கிரெடாய் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, கிரெடாய் சென்னை தலைவர் முகமது அலி கூறுகையில், ”பேர்ப்ரோ – 2025க்கு கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்த கண்காட்சி, ரியல் எஸ்டேட் துறையில் புதிய சாதனை படைத்துள்ளது. இது, கிரெடாய் சென்னை பிரிவு மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை காட்டுகிறது,” என்றார்.