செங்கையில் புத்தக திருவிழா
செங்கல்பட்டு, செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், செங்கை பாரதியார் மன்றம் இணைந்து, ஆறாவது ஆண்டு செங்கை புத்தக திருவிழா, நேற்று துவங்கியது.
செங்கல்பட்டு சி.எஸ்.ஐ., அலிசன்காசி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், வரும் 28ம் தேதி நடக்கிறது. அமைச்சர் அன்பரசன் புத்தக திருவிழாவை துவக்கினார்.
அரசு பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்காக 20 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஒவ்வொரு மாணவரும் தலா 100 ரூபாய்க்கு புத்தகம் வாங்கலாம் என, கலெக்டர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.