குப்பை கொட்டுவதை தடுக்க மின்மாற்றியை சுற்றி தடுப்பு
கோடம்பாக்கம், கோடம்பாக்கம் மண்டலம், யூனைடெட் இந்தியா காலனி 4வது தெரு, கோடம்பாக்கம் ரயில்வே பார்டர் சாலை உள்ளிட்ட இடங்களில், மின்மாற்றிகள் உள்ளன.
இவற்றின் கீழ் குப்பை மற்றும் கட்டட கழிவு கொட்டப்பட்டு வந்தது. அவற்றை சுத்தம் செய்யும்போது, மாநகராட்சி ஊழியர்கள் மின்சாரம் பாய்ந்து பாதிக்கப்பட்டு வந்தனர். அத்துடன், மின்மாற்றி பராமரிப்பு பணியின்போது, மின்வாரிய ஊழியர்களும் அவதிப்பட்டு வந்தனர்.
இதற்கு தீர்வு காணும் விதமாக, மின்மாற்றியைச் சுற்றி இரும்பு தகரத்தால் ஆன வண்ண தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன.
இதனால், குப்பை கொட்டுவது தடுக்கப்பட்டு உள்ளது. மின்மாற்றி பராமரிப்பு பணிக்காக, ஊழியர்கள் உள்ளே சென்று வர, கதவும் அமைக்கப்பட்டு உள்ளது.
இதனால், மின் விபத்து அபாயம் இருக்காது எனவும், மின்மாற்றியைச் சுற்றி தடுப்புகள் அமைக்க 2 லட்சம் ரூபாய் ஆகிறது எனவும், மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.