வேன் கவிழ்ந்து விபத்து
பெரம்பூர், பெரம்பூர் வீனஸ் மார்க்கெட் அருகே, நேற்று முன்தினம் இரவு 8:00 மணியளவில் பிஸ்கட் லோடு ஏற்றிய ‘அசோக் லேலண்ட் தோஸ்த்’ ரக சிறிய வேன், திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சாலை நடுவே உள்ள தடுப்பில் மோதி கவிழ்ந்தது.
அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் குமார் சிறு காயங்களுடன் தப்பினார். மற்ற யாருக்கும் பாதிப்பில்லை. இந்த விபத்தால், பெரம்பூர் முதல் ரெட்டேரி வரை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதனால் வாகனங்கள் பெரவள்ளூர் சதுக்கத்தில் இருந்து பல்லவன் சாலை வழியே திருப்பிவிடப்பட்டன. ஒரு மணி நேரத்திற்கு பின், பொதுமக்கள் உதவியுடன் வேன் துாக்கி நிறுத்தப்பட்ட நிலையில், அப்பகுதியில் போக்குவரத்து சீரானது.