வாகனம் மோதி காவலாளி பலி
மதுரவாயல், ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தைச் சேர்ந்தவர் கிரி, 45. இவர், குடும்பத்துடன் சவுகார்பேட்டையில் தங்கி, மென்பொருள் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்தார்.
வானகரத்தில் உள்ள இவரது உறவினர் வீட்டிற்கு வந்து விட்டு, தன் ‘ஹீரோ பேஷன் ப்ரோ’ பைக்கில், நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பினார்.
தாம்பரம் — மதுரவாயல் பைபாஸ் சாலையில், வானகரம் அடுத்த ஓடமா நகர் அருகே சென்றபோது, முன்னால் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மீது பைக் மோதியதில், நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
இதில், கிரியின் பின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு போலீசார், கிரி உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.