மத்திய அரசு அலுவலகத்திற்கு 2வது முறையாக குண்டு மிரட்டல்
ஆவடி, ஆவடி, எச்.வி.எப்., சாலையில் மத்திய அரசின் கனரக வாகனங்கள் தயாரிப்பு தொழிற்சாலை மற்றும் இன்ஜின் தயாரிப்பு தொழிற்சாலையின் தலைமை அலுவலகம் உள்ளது.
இந்த அலுவலகத்திற்கு, கடந்த 14ம் தேதி வெடிகுண்டு வைத்துள்ளதாகவும், பிற்பகல் 2:55 மணி அளவில் வெடிக்கும் எனவும், மர்ம நபர் இ – மெயில் வாயிலாக மிரட்டல் விடுத்திருந்தார்.
ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்தபோது, அது வெறும் புரளி என தெரிந்தது.
இந்நிலையில், நேற்று காலை அதே நபரிடம் இருந்து, இரண்டாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. அதில், ‘வெடிகுண்டு அங்கே தான் இருக்கிறது; நீங்கள் சரியாக சோதனை செய்யவில்லை. முற்பகல் 11:00 மணிக்கு வெடிக்கும்’ என குறிப்பிட்டு இருந்தது.
ஆனால், மர்ம நபர் சொன்னது போல் குண்டு வெடிக்கவில்லை. புகாரின்படி, நேற்று இரவு போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர்.