பல்லாவரம் அரசு பள்ளியில் 8 வகுப்பறை கட்ட பூமி பூஜை

பல்லாவரம்: பல்லாவரத்தில், ஜி.எஸ்.டி., சாலையை ஒட்டி, மறைமலை அடிகள் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வகுப்பறைகள் இல்லை.

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பறைகளில், அதிகமான சேர்க்கையால், மாணவர்கள் அமர இடமில்லாமல் சிரமப்படுகின்றனர்.

இந்நிலையில், தனியார் தொண்டு நிறுவன நிதி வாயிலாக, 1.12 கோடி ரூபாய் செலவில், எட்டு வகுப்பறைகள் கட்ட முடிவு செய்யப்பட்டு, அதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது.

பல்லாவரம் தி.மு.க., – எம்.எல்.ஏ., கருணாநிதி, மண்டலக் குழு தலைவர் ஜோசப் அண்ணாதுரை ஆகியோர் பணியை துவக்கி வைத்தனர்.

புதிதாக கட்டப்பட உள்ள வகுப்பறை, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு பயன்படுத்தப்படும் என, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *