சென்னை :புகார் பெட்டி; வட சென்னை திறந்த நிலை மின் பெட்டியால் பாதசாரிகள் பீதி
திறந்த நிலை மின் பெட்டியால் பாதசாரிகள் பீதி
அம்பத்துார் தொழிற்பேட்டை மூன்றாவது பிரதான சாலை மற்றும் வானகரம் பிரதான சாலையை, அத்திப்பட்டு, குடிநீர் அலுவலகம் எதிரே உள்ள 8வது தெரு இணைக்கிறது.
அங்குள்ள நடைபாதையில் வைக்கப்பட்டுள்ள மின்பகிர்மான பெட்டி திறந்த நிலையில் உள்ளதால், பாதசாரிகள் மின் விபத்தில் சிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
அப்பெட்டியைச் சுற்றிலும், செடிகள் படர்ந்து, குப்பை கழிவு சூழ்ந்துள்ளது. அவற்றை உண்ண வரும், கால்நடைகள் மீது அவ்வப்போது மின்சாரம் பாய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மின் வாரிய அதிகாரிகள் உயிர்பலி வாங்க காத்திருக்கும் மின் பெட்டியை மூட வேண்டும்.
ரகுநாதன்
அம்பத்துார்.