ஊதியம் வழங்காத ஹோட்டல் ஓனரின் ‘ பிரேஸ்லெட் ‘ எடுத்து சென்ற ஊழியர்

கே.கே.நகர்:அசோக் நகர், புதுாரைச் சேர்ந்தவர் தென்னரசு, 35. இவர், எம்.ஜி.ஆர்., நகர், பிள்ளையார் கோவில் தெருவில் ‛அம்மன்’ என்ற பெயரில் ஹோட்டல் நடத்தி வருகிறார்.

இவரது ஹோட்டலில், துாத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முருகேசன், 40, என்பவர் பணிபுரிகிறார். முருகேசனுக்கு கடந்த மூன்று மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் மதியம் ஊதிய தொகை கேட்க, தென்னரசு வீட்டிற்கு முருகேசன் சென்றுள்ளார். அப்போது, வீட்டின் கதவை பூட்டாமல் தென்னரசு துாங்கி கொண்டிருந்தார். அருகே அவரது, 3 சவரன் ‘பிரேஸ்லெட்’ கழற்றி வைக்கப்பட்டிருந்தது. அந்த நகையை முருகேசன் எடுத்து தான் தங்கிருக்கும் அறைக்கு சென்றுள்ளார்.

நகை குறித்து தென்னரசு கேட்டபோது, ஊதியம் தந்தால் நகையை தந்து விடுகிறேன் என, முருகேசன் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தென்னரசு, கே.கே., நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் இருவரிடமும் விசாரிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *