எழும்பரில் பாரம்பரிய கைத்தறி விற்பனை பொருட்கள் கண்காட்சி
சென்னை:’சென்னை சந்தே’ எனும் இந்தியாவின் பாரம்பரிய கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள் விற்பனை கண்காட்சி, எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் நேற்று முன்தினம் துவங்கியது. மான்யா ஆர்ட் அண்ட் கிராப்ட் மற்றும் ஸ்மார்ட் ஆர்ட் ஈவென்ட்ஸ் நிறுவனம், இக்கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது.
காதலர் வாரத்துடன், வரும் 23ம் தேதி வரை, 10 நாட்கள் நடக்கும் விற்பனை கண்காட்சியில், 90க்கும் மேற்பட்ட கடைகளில், நாடு முழுதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் கிடைக்கும், அழகிய கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
மேலும், ஒடிசா, மணிப்பூர், ஹிமாச்சலப் பிரதேஷ் மாநிலங்களைச் சேர்ந்த கைவினைஞர்களின், அரிய கலை வடிவ பொருட்கள்; காந்தா, கசுதி, இகாட், புல்காரி, உப்பாடா உள்ளிட்ட பாரம்பரிய ஜவுளிகள் இடம் பெற்றுள்ளன.
கோல்கட்டா மற்றும் பனாரசியின் கவர்ச்சியான புடவைகள், கண்கவர் மெழுகுவர்த்தி ஸ்டாண்டுகள் உள்ளிட்ட பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன.