அமெட்’ பல்கலை நிறுவன விழா 83 ஆசிரியர்கள் கவுரவிப்பு
சென்னை:அமெட் பல்கலை மற்றும் டாக்டர் ஜெ.ராமசந்திரன் கடல்சார் அறக்கட்டளை இணைந்து, அமெட் பல்கலையின் 32வது நிறுவன விழா, கிழக்கு கடற்கரை சாலை, கானத்துார் பகுதியில் நேற்று நடந்தது.
விழாவிற்கு, பல்கலை நிறுவனரும், வேந்தருமான டாக்டர் ஜே.நாசே ராமசந்திரன் தலைமை தாங்கினார். பல்கலை தலைவர் ராஜேஷ் ராமசந்திரன், துணை தலைவர் தீபா ராஜேஷ் ஆகியோர் வரவேற்று பேசின
நிர்வாக அறங்காவலர் சுசிலா ராமசந்திரன், நீண்ட காலம் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு, ஊக்கத்தொகை, நற்சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, சென்னை முன்னாள் மேயரும், மனிதநேய அறக்கட்டளை நிறுவனருமான சைதை துரைசாமி, தமிழகத்தில் சிறப்பாக பணியாற்றிய, அரசு மற்றும் தனியார் பள்ளியைச் சேர்ந்த, 83 ஆசிரியர்களுக்கு, சான்றிதழ் மற்றும் விருதுகள் வழங்கி கவுரவித்தார்.
நிகழ்ச்சியில், பேராசிரியர் கர்னல். திருவாசகம், துணை வேந்தர் ராஜேந்திரன், பதிவாளர் முத்தெழிலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிறைவாக, கூடுதல் பதிவாளர் சங்கீதா ஆல்பின் நன்றி தெரிவித்தார்.