ஆவடியில் ‘மியாவாக்கி’ குறுங்காடு அமைக்கப்படும்: அமைச்சர் நாசர்

ஆவடி, ஆவடி மாநகராட்சி, 19வது வார்டு பட்டாபிராம், தண்டுரை பள்ளத்து கோவில் அருகில் உள்ள பெருமாள் கோவில் குளத்தை, 17 லட்சம் ரூபாயில் சீரமைக்கும் பணியை அமைச்சர் நாசர் நேற்று துவக்கி வைத்தா

இதைத் தொடர்ந்து, ஆவடி மாநகராட்சி கூட்டரங்கில், திடக்கழிவு மேலாண்மை குறித்த ஆலோசனை கூட்டம், அமைச்சர் நாசர் தலைமையில் நேற்று நடந்தது. இதில், மேயர் உதயகுமார், மாநகராட்சி கமிஷனர் கந்தசாமி மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், அமைச்சர் நாசர் பேசியதாவது:

திடக்கழிவு கையாள வல்லுநர்கள் கொண்டு, பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். பயோமெட்ரிக் வாயிலாக வருகை பதிவேடு வேண்டும். வாகனங்களை கண்காணிக்க, ஜி.பி.எஸ்., கருவி மற்றும் தானியங்கி எடையிடும் கருவி பொருத்த வேண்டும்.

திடக்கழிவு மேலாண்மை குறித்து, குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகளை அழைத்து, குறைதீர் கூட்டம் நடத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஆவடி மாநகராட்சியின் நான்கு மண்டலங்களிலும், 1,500 மரக்கன்று நடப்படும்; 70 லட்சம் ரூபாய் மதிப்பில் மியாவாக்கி குறுங்காடுகள் அமைக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *