10ம் வகுப்பு மாணவன் மீது தாக்குதல் மற்றொரு பள்ளி மாணவர்கள் வெறி
அயனாவரம்,அயனாவரம், ஏழுமலை தெருவைச் சேர்ந்தவர் பாபு, 42; எலக்ட்ரீஷியன். இவரது மனைவி காஞ்சனா, 38. தம்பதியின் 15 வயது மகன், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், 10ம் வகுப்பு படிக்கிறார்.
நேற்று முன்தினம் மாலை, பள்ளியில் இருந்து டியூஷனுக்கு சென்றுவிட்டு, அதேபகுதியில் உள்ள சொல்லியம்மன் தெரு வழியாக நடந்து சென்றுள்ளார்.
அப்போது, அதேபகுதியில் உள்ள மற்றொரு தனியார் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் சிலர், பாபுவின் மகனை வழிமறித்து சரமாரியாக தாக்கினர். இதில், பத்தாம் வகுப்பு மாணவனின் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, அயனாவரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
போலீசாரின் விசாரணையில், கடந்த வாரத்தில் பாதிக்கப்பட்ட மாணவன், சக மாணவர்களுடன் பள்ளி அருகே பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த மற்றொரு பள்ளியைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவர் ஒருவர், தகாத வார்த்தையால் பேசி, அவர்களிடம் வீண்தகராறு செய்துள்ளார்.
இதனால், இருதரபினருக்கும் பிரச்னை ஏற்பட்டு கலைந்து சென்றனர். இந்த முன்விரோத்தில், ஒன்பதாம் வகுப்பு மாணவர், சக நண்பர்களுடன் சேர்ந்து, தனியாக சிக்கிய பத்தாம் வகுப்பு மாணவனை தாக்கியது தெரிவந்தது. சம்பவத்தில் ஈடுபட்ட மாணவர்கள் குறித்து, போலீசார் விசாரிக்கின்றன