வீட்டில் லிப்ட் பேட்டரி திருடிய வாலிபர் கைது
மதுரவாயல், ஆலப்பாக்கம், ஏகாம்பரம் இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் பகுதியில் வசிப்பவர் நாகராஜு, 44. கடந்த 23ம் தேதி, இவரது வீட்டிலிருந்து, நான்கு லிப்ட் பேட்டரிகளை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.
இதுகுறித்து, நாகராஜு, மதுரவாயல் போலீசில் புகார் அளித்தார். போலீசார் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது, மர்ம நபர் ஒருவர், பேட்டரிகளை திருடிச் செல்வது பதிவாகியிருந்தது.
அதன்படி விசாரித்த போலீசார், பேட்டரியை திருடிய மதுரவாயல், கந்தசாமி நகரைச் சேர்ந்த ஹரிஷ், 20, என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து நான்கு பேட்டரிகளை பறிமுதல் செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.