கள்ளத் தொடர்பு ரவுடிக்கு வெட்டு
ராஜமங்கலம்,கொளத்துார், சிவசக்தி நகரைச் சேர்ந்தவர் ஜீவா, 29; சரித்திர பதிவேடு ரவுடி. இவர் வெங்கட் நகர் செங்குன்றம் சாலையில் சென்றபோது, மர்மநபர்கள் கத்தியால் வெட்டிவிட்டு தப்பினர். அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ராஜமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். வளவராசன் என்பவர் மனைவியுடன் ஏற்பட்ட கள்ளத்தொடர்பு காரணமாக, ஜீவாவை வெட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, வளவராசன், 23 குன்றத்துாரைச் சேர்ந்த ரகுராமன், 29 ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்து, சிறையில் அடைத்தனர்.