பேருந்தில் பெண்களிடம் ‘காவலன் ‘ செயலி விழிப்புணர்வு
ஆவடி, ஆவடி போலீஸ் கமிஷனரகம் சார்பில், பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த அறிமுகப்படுத்தப்பட்டுள்ள, ‘காவலன்’ செயலி குறித்த விழிப்புணர்வு, பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் நேற்று நடந்தது.
ஆவடி கமிஷனர் சங்கர் பங்கேற்று, பள்ளி, கல்லுாரி மாணவியர் மற்றும் பெண்களிடம், ‘காவலன்’ செயலியை பதிவிறக்கம்செய்து, அதன் பயன்பாடு குறித்து விளக்கம் அளித்தார்.
அதேபோல், கூடுதல் போலீஸ் கமிஷனர்பவானீஸ்வரி, அரசு பேருந்து ஒன்றில் பயணம் செய்து, பெண்களிடம், ‘காவலன்’ செயலி பயன்பாடு குறித்து செயல் விளக்கம் அளித்தார்.