வட சென்னை வளர்ச்சி திட்டத்தில் பிராட்வே பிரகாசம் தெருவில் சிஎம் டிஏ சார்பில் திட்ட பணி: அமைச்சர் பி.கே .சேகர்பாபு நேரில் ஆய்வு

சென்னை: பிராட்வே பிரகாசம் தெருவில் வருவாய் துறைக்கு சொந்தமான இடத்தில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் புதிய திட்டப்பணிகள் மேற்கொள்வதற்காக அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். சென்னை துறைமுகம் சட்டமன்ற தொகுதி, 5வது மண்டலம், 57வது வார்டுக்கு உட்பட்ட ஜார்ஜ் டவுன், பிராட்வே, பிரகாசம் தெருவில் வருவாய் துறைக்கு சொந்தமான இடத்தில் வடசென்னை வளர்ச்சி திட்டத்தின்கீழ் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பில் புதிய திட்டப்பணிகள் மேற்கொள்வதற்காக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும தலைவருமான பி.கே.சேகர்பாபு நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதனைத் தொடர்ந்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு துறைமுகம் சட்டமன்ற தொகுதி, 5வது மண்டலம், 56வது வார்டுக்கு உட்பட்ட ஜார்ஜ் டவுன், பிராட்வே சாலை, பி.ஆர்.என் கார்டனில் கட்டப்பட்டு வரும் புதிய தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்புகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வுகளின்போது மேயர் பிரியா, வருவாய்த்துறை செயலாளர் அமுதா, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலாளர் காகர்லா உஷா, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் பிரபாகர், சிஎம்டிஏ முதன்மை செயல் அலுவலர் சிவஞானம், சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, மத்திய வட்டார துணை ஆணையாளர் பிரவீன் குமார், மண்டல குழு தலைவர் ஸ்ரீராமலு, தலைமை திட்ட அமைப்பாளர் ருத்ரமூர்த்தி, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய கண்காணிப்பு பொறியாளர் இளம்பருதி, சென்னை மாவட்ட வருவாய் அலுவலர் கீதா, மண்டல அலுவலர் பரிதா பானு, மாமன்ற உறுப்பினர்கள் ஆசாத், பரிமளம், தாஹா நவீன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *