அண்ணா நகரில் பொலிவிழந்த நீரூற்றுகள் மாநகராட்சி அலட்சியம்

அண்ணா நகர், சென்னையை அழகுபடுத்தும் விதமாக, ‘சிங்கார சென்னை 2.0’ திட்டதின் கீழ், மாநகராட்சியினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக, பொது இடங்களில் சுவர்களில் கண்கவரும் வண்ணமையமான ஓவியங்கள், சுவர் பூங்காக்கள் உள்ளிட்டவை மேற்கொண்டு வருகின்றன.

அதுமட்டுமின்றி, முக்கிய சாலைகளை புனரமைத்து, மக்களை கவரும் வகையில் வண்ண விளக்குகள் அமைக்கப்பட்டன. ஆனால், பல லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட செயற்கை நீரூற்றுகளை கண்டுக்கொள்வதில்லை.

குறிப்பாக, அண்ணா நகரில், மூன்றாவது அவென்யூவில் அண்ணா ரவுண்டானா, கே – 4 காவல் நிலையம் எதிரில் மற்றும் நியூ ஆவடி சாலை இணைப்பு சாலை சிக்னல்களில், செயற்கை நீரூற்றுகள் உள்ளன. இதில், காவல் நிலையம் அருகில் மற்றும் நியூ ஆவடி சாலையில் மட்டும் பயன்பாடின்றி உள்ளன.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

அண்ணா நகர் காவல் நிலையம் அருகில் புதிதாக அமைக்கப்பட்ட நீரூற்றுகள் சில நேரங்களில் மட்டுமே இயங்குகிறது.

நியூ ஆவடி சாலை நீரூற்று காட்சிப் பொருளாக இருக்கிறது. அதேபோல, மேம்பால சுவர் பூங்காக்களும் சேதம் அடைந்து கிடக்கின்றன.

மாநகராட்சியின் அலட்சியத்தால், மக்களின்வரிப்ணம் வீணாகுகிறது. சம்பந்தப்பட்ட இடங்களில் நீரூற்றுகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *