கொடுங்கையூர் சுற்றுச்சூழல் பாதிப்பு கண்காணிக்கிறது அண்ணா பல்கலை
கொடுங்கையூர் குப்பை கிடங்கு ‘பயோ மைனிங்’ முறையில் அகற்றப்படுவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பை கண்காணிக்க, 2.02 கோடி ரூபாயை மாநகராட்சி ஒதுக்கியுள்ளது.
கொடுங்கையூர் குப்பை கிடங்கு, 350 ஏக்கர் பரப்பளவு கொண்டது. பல ஆண்டுகளாக கொட்டப்பட்டுள்ள குப்பையை, ‘பயோ மைனிங்’ முறையில் அகற்றி, அந்நிலத்தை மீட்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, 640.83 கோடி ரூபாய் மதிப்பில், கொடுங்கையூர் குப்பை கிடங்கு மீட்கப்பட உள்ளது. இந்நிலையில், ‘பயோ மைனிங்’ முறையில் நிலம் மீட்கப்படுவதை கண்காணித்தல் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பை தடுத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள, அண்ணா பல்கலைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான நீண்டகால சேவையை கருதி, 2.02 கோடி ரூபாய், செலவு திட்டத்திற்கு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, அதற்கான நிதியும் மாநகராட்சி ஒதுக்கியுள்ளது.