சென்டிரல் ரெயில் நிலையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நாளை (வியாழக்கிழமை) நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு போட்டியின் தொடக்கவிழாவை முன்னிட்டு பிரதமர் மோடி சென்னை வருகிறார்.
பிரதமரின் வருகையையொட்டி சென்னை முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்தவகையில் எம்.ஜி.ஆர் சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீஸ், ரெயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் அப்பகுதியை சுற்றி பூக்கடை, பெரியமேடு போலீசார் என ஏராளமான போலீசார் தொடர்ந்து தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன.
மேலும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய்கள் உதவியோடு சோதனைகளிலும் ஈடுபட்டு வருகின்றன. ரெயில் நிலையத்துக்குள் வரும் பயணிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.