மேஸ்திரிகளின் மண்டை உடைப்பு வட மாநில தொழிலாளர்கள் கை
திருமங்கலம்,மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் ரபியுல், 31, ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் சமியுல், 25. இருவரும், திருமங்கலம், பாடிகுப்பம் பிரதான சாலையில் கட்டி வரும், அரசின் வீட்டு வசதி வாரிய கட்டுமான பணியிடத்தில், மேஸ்திரியாக பணிபுரிகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு 10:30 மணியளவில், இருவரும் பணியிடத்தில் உள்ள அறையில், கணக்கு வழக்குகளை சரிபார்த்து கொண்டிருந்தனர். அப்போது, மற்றொரு அறையில் கட்டுமான தொழிலாளர்கள் சிலர், மது அருந்தி அட்டகாசம் செய்து கொண்டிருந்தனர்.
இதை, சமியுல் மற்றும் ரபியுல் ஆகியோர் தட்டிக் கேட்டுள்ளனர். ஆத்திரமடைந்த தொழிலாளர்கள், அங்கிருந்த கல் மற்றும் கட்டையால், இருவரையும் சரமாரியாக தாக்கினர்.
காயமடைந்த இருவரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, இருவரின் தலையிலும் தையல்கள் போட்டன.
இது குறித்த புகாரை அடுத்து, சம்பவத்தில் ஈடுபட்ட ஒடிசாவைச் சேர்ந்த அடுதாஸ், 21, துர்க்கை பிரசாத், 35, தனேஷ் தாஸ், 28, பிஜய்குமார் நாயக், 45, ஆகிய நான்கு பேரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.