பயணியிடம் சில்மிஷம் ஆம்னி பஸ் ஓட்டுநர் கைது
கொடுங்கையூரைச் சேர்ந்தவர் 51 வயது பெண். இவர், பெங்களூரில் இருந்து சென்னைக்கு, நேற்று முன்தினம் ஆம்னி பேருந்தில் கணவருடன் பயணித்தார்.
இரவு 11:00 மணியளவில் பேருந்து, கோயம்பேடிற்கு வந்தது. அப்போது, ஆம்னி பேருந்தின் மாற்று ஓட்டுநர், 51 வயது பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்த புகாரையடுத்து, பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த கோயம்பேடு பேருந்து நிலைய போலீசார், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணசேகர், 38, என்பவரை நேற்று கைது செய்தனர்.