செடி, க ொடி சூழ்ந்த பூங்கா சீர்படுத்த கோரிக்கை
பெருங்குடி மண்டலம், வார்டு -189, பள்ளிக்கரணை, காமகோட்டி நகரில் உள்ள பூங்காவை தினமும் காலை, மாலை என 500க்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர்.
இப்பூங்காவின் பல இடங்களில் செடி, கொடி சூழ்ந்து கிடக்கிறது. தவிர, சிறுவர் விளையாட்டு உபகரணங்கள் பழுதடைந்து உள்ளன. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் பூங்காவை சீர்படுத்தி, சிறுவர் விளையாட்டு உபகரணங்களை பழுது நீக்கித் தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
— மா.லட்சுமி, 36,
காமகோட்டி நகர், பள்ளிக்கரணை.