இரட்டை கொலையாளி டில்லியில் சிக்கினார்
துரைப்பாக்கம், துரைப்பாக்கத்தைச் சேர்ந்தவர் மாயாண்டி, 62. இவரது மனைவி வள்ளிநாயகி. கடந்த 2018ம் ஆண்டு வீட்டில் தனியாக இருந்தபோது, இரண்டு பேரையும் கொலை செய்த நபர், நகை பணத்துடன் தப்பினார்.
துரைப்பாக்கம் போலீசாரின் விசாரணையில், இவர்கள் வீட்டில் டைல்ஸ் வேலை செய்த, பீஹார் மாநிலத்தை சேர்ந்த கம்ரூல் ஆலம், 38, என தெரிந்தது. போலீசார், இவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜாமினில் வெளிவந்த இவர், நீதிமன்றத்தில் ஆஜராகாமல், 2021ம் ஆண்டு தலைமறைவானார். நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. தீவிர விசாரணையில், டில்லியில் தலைமறைவாக இருப்பது தெரிந்தது.
இவரை கைது செய்து, சென்னை அழைத்து வந்த போலீசார், நேற்று, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.