மாதவரத்தில் 8ம் தேதி வேலை வாய்ப்பு முகாம்
சென்னை:வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் இயங்கும், சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினர் சார்பில், கடந்த டிச., 14ம் தேதி, வேலைவாய்ப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. மழையின் காரணமாக தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த வேலைவாய்ப்பு முகாம், வரும் 8ம் தேதி மாதவரத்தில் அமைந்துள்ள புனித அன்னாள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், காலை 8:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை நடைபெற உள்ளது.
இதில், 200க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, 2,000த்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.
இந்த முகாமில், 8ம் வகுப்பு படித்தவர்கள் முதல் அனைவரும் www.tnprivatejobs.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து, இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கலாம்.