இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்களில் இரு கூடுதல் ஏசி’ பெட்டிகள்
சென்னை:வடக்கு ரயில்வே இரண்டு இக்ஸ்பிரஸ் ரயில்களில், நிரந்தரமாக ஏசி’ பெட்டிகளை இணைத்துள்ளது.
சென்னை சென்ட்ரலில் இருந்து, டில்லி, ஹஜ்ரத் நிஜாமுதின் செல்லும், ஹஜ்ரத் நிஜாமுதின் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில், ஒரு முதல் வகுப்பு ஏசி’ பெட்டியும், ஒரு மூன்றாம் வகுப்பு ஏசி’ பெட்டியும் நிரந்தரமாக இணைக்கப்பட்டுள்ளன.
இது, ஹஜ்ரத் நிஜாமுதினில் இருந்து, வரும் 4ம் தேதி முதலும், சென்னை சென்ட்ரலில் இருந்து, வரும் 7ம் தேதி முதலும் அமலாக உள்ளது.
அதேபோல், திருவனந்தபுரத்தில் இருந்து, டில்லி, ஹஜ்ரத் நிஜாமுதின் செல்லும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில், நிரந்தரமாக ஒரு முதல் வகுப்பு ஏசி’ மற்றும் ஒரு மூன்றாம் வகுப்பு ஏசி’ பெட்டிகள் இணைக்கப்பட்டு உள்ளன.
இது, நிஜாமுதினில் இருந்து, 4ம் தேதி முதலும், திருவனந்தபுரத்தில் இருந்து, வரும் 6ம் தேதி முதலும் அமலாக உள்ளது.