மூதாட்டியிடம் கத்தியை காட்டி 5 மொபைல் போன்கள் திருட்டு
வியாசர்பாடி:வியாசர்பாடி, மாணிக்கவிநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செந்தில்வேலன், 54. இவர், தன் தாய் சுலோச்சனா, 86,வுடன், தனியாக வசித்து வருகிறார்.
தினமும் இரவு, தாய் சுலோச்சனாவை வீட்டின் மற்றொரு அறையில் வைத்து பூட்டி விட்டு, அதிகாலை திறப்பது வழக்கம்.
இந்நிலையில், நேற்று முன்தினம் காலை 5:00 மணிக்கு, இரண்டு மர்ம நபர்கள், செந்தில்வேலன் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த ‘சிசிடிவி’ கேமராக்களை உடைத்துள்ளனர்.
மேலும், சுலோச்சனாவின் அறை பூட்டை உடைத்து உள்ளே சென்று, கத்தியை காட்டி மிரட்டி, சுலோச்சனாவின் மொபைல் போன் மற்றும் பீரோவில் இருந்த நான்கு மொபைல் போன்களை திருடி சென்றனர்.
இது குறித்து, செந்தில்வேலன் கொடுத்த புகாரின்படி, செம்பியம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.