த.வெ.க., அலுவலகத்தில் 5 தலைவர்கள் சிலை திறப்பு
சென்னை:நடிகர் விஜய், தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை துவங்கி, நேற்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது.
இதில், கட்சிக்கொடி, பாடல், கொள்கை சார்ந்த அறிவிப்புகள், அடுத்தடுத்து வெளியாகின. கடந்த அக்., மாதம், விக்கிரவாண்டியில் முதல் மாநில மாநாட்டை நடத்தினார்.
சில வாரங்களாக, மாவட்ட செயலர்கள் நியமனம் நடக்கிறது. கட்சி துவங்கி, இரண்டாம் ஆண்டு துவங்குவதையொட்டி, நேற்று, இ.சி.ஆர்., பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில், ஐந்து தலைவர்கள் சிலை திறக்கும் நிகழ்ச்சி நடந்தது.
மாநாட்டில் அறிவித்தபடி, கட்சி கொள்கை தலைவர்களான அம்பேத்கர், காமராஜர், ஈ.வே.ரா, வேலுநாச்சியார், அஞ்சலையம்மாள் ஆகியோரின் மார்பளவு திருவுருவ சிலைகளை, விஜய் திறந்து வைத்தார்.
தொடர்ந்து, புதிதாக நியமிக்கப்படவுள்ள மாவட்ட செயலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.