கோயம்பேடில் கார் திருடிய ஆட்டோ ஓட்டுநர் சிக்கினார்
கோயம்பேடு:கோயம்பேடு சேமாத்தம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி, 52. இவர், கோயம்பேடு காய்கறி சந்தையில் ஹோட்டல் நடத்தி வருகிறார்.
கடந்த 27ம் தேதி, அவரது ‘மஹிந்திர ஸ்கார்பியோ’ கார் பழுதானதால், கோயம்பேடு ‘சந்தை – ஏ’ சாலையில் உள்ள, ஆட்டோ நிறுத்தத்தில் நிறுத்திவிட்டு, சாவியை அருகில் உள்ள ேஹாட்டலில் கொடுத்துள்ளார். பின், கார் மெக்கானிக்கிடம் தகவலை கூறி சென்றார்.
கார் மெக்கானிக் மேற்படி தள்ளுவண்டி உணவகத்தில் கார் சாவியை பெற்றுக் கொண்டு, காரின் மோட்டாரை மட்டும் கழற்றி எடுத்துக் கொண்டு, கார் சாவியை மீண்டும் அதே ேஹாட்டலில் கொடுத்து சென்றார்.
கோவிந்தசாமி வந்து பார்த்தபோது, மேற்படி உணவகத்தில் கொடுத்திருந்த சாவியும் காரும் அங்கு இல்லாததால், யாரோ திருடிச் சென்றது தெரியவந்தது.
இது குறித்த புகாரையடுத்து, கோயம்பேடு போலீசார் விசாரித்தனர். இதில், விருகம்பாக்கம் அய்யப்பா நகரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ராஜா, 37, சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையில், கோவிந்தசாமி காரை விட்டு சென்ற ஆட்டோ நிறுத்தத்தில், ராஜா ஆட்டோ ஓட்டி வந்ததும் தெரிய வந்தது. ராஜாவை கைது செய்த போலீசார், திருடப்பட்ட கார் மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.