4ம் வகுப்பு சிறுமி விபத்தில் உயிரிழப்பு
மடிப்பாக்கம்:மடிப்பாக்கம், வேம்புலி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாலாஜி. இவரது மனைவி நிர்மலா. மகள் ஆதிலட்சுமி, 10; நான்காம் வகுப்பு மாணவி.
நிர்மலா மகள் ஆதிலட்சுமியுடன் இருசக்கர வாகனத்தில், நேற்று முன்தினம் மதியம் துரைப்பாக்கம் ரேடியல் சாலை வழியாக, குரோம்பேட்டையில் உள்ள பிரபல தனியார் துணிக்கடைக்கு சென்றார்.
கோவிலம்பாக்கம் அருகே சென்றபோது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம், நிர்மலாவின் இருசக்கர வாகனத்தின் மீது மோதி, நிற்காமல் சென்றது. இதில் இருவரும் கீழே விழுந்தனர்.
பலத்த காயமடைந்த சிறுமி ஆதிலட்சுமி, அதேபகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். விபத்து ஏற்படுத்தி நிற்காமல் சென்ற வாகனம் குறித்து, ‘சிசிடிவி’ கேமராக்களை ஆய்வு செய்து, பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.