காவல் எப். ஐ.ஆர்., இணையதளத்தில் பதிவேற்ற அறிவுரை
சென்னை:பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகளை தவிர்த்து, இதர குற்ற வழக்குகள் தொடர்பான எப்.ஐ.ஆர்., எனும் முதல் தகவல் அறிக்கை, காவல் துறை இணையதளத்தில் முறையாக பதிவேற்றம் செய்யப்படுவதில்லை என, குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயனிடம், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் முறையிடப்பட்டது.
இதை பரிசீலித்த நீதிபதிஎஸ்.கார்த்திகேயன், ”சென்னை நகர காவல் எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையங்களில், அவ்வப்போது பதிவு செய்யப்படும் முதல் தகவல் அறிக்கையை, காவல்துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய, இன்ஸ்பெக்டர்களுக்கு உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்,” என, மாநகர காவல் ஆணையருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக நீதிபதி, கடிதமும் அனுப்பியுள்ளார்.