ஓய்வு அரசு ஊழியர் மீது ரூ.4 லட்சம் மோசடி வழக்கு
அரும்பாக்கம் :அயப்பாக்கத்தைச் சேர்ந்தவர் அந்தோணி, 30. இவருக்கு, சி.எம்.டி.ஏ.,வில் பணியாற்றி, ஓய்வு பெற்ற ஓட்டுநர் பன்னீர்செல்வம், 70, என்பவர் அறிமுகமாகியுள்ளார்.
அந்தோணிக்கு, அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 4 லட்சம் ரூபாயை, கடந்த 2022 ஜன., 18ல் பன்னீர்செல்வம் வாங்கியுள்ளார். அதன்பின் வேலையும் வாங்கி தராமல், பணத்தையும் திரும்பத் தராமல் தொடர்ந்து ஏமாற்றி வந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் தான் ஏமாற்றப்படுவதை உணர்ந்த அந்தோணி, இதுகுறித்து அரும்பாக்கம்போலீசில் புகார் அளித்தார்.
இது குறித்து விசாரித்த அரும்பாக்கம் போலீசார், எம்.எம்.டி.ஏ., காலனியை சேர்ந்த பன்னீர்செல்வத்தின் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.