கொரட்டூரில் சர்ச் கட்டடம் இடிப்பு உறுப்பினர்கள் எதிர்ப்பு

கொரட்டூர், :கொரட்டூர், வடக்கு நிழற்சாலையில், ‘சிஎஸ்ஐ’ சர்ச் உள்ளது. கடந்த 2022ல் சர்ச் கட்டடத்தை இடித்து அகற்றி புதிதாக கட்ட, ‘டெண்டர்’ கோரப்பட்டது. நான்கு நிறுவனங்கள் ஒப்பந்தபுள்ளி கோரின.

இந்நிலையில், சர்ச் கமிட்டி நிர்வாகிகள், டெண்டர் ஒதுக்குவதில் ஒருதலைபட்சமாக நடந்து கொண்டதாக புகார் எழுந்தது. மூத்த உறுப்பினர் சாமுவேல் என்பவர், அம்பத்துார் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

வழக்கு நிலுவையில் இருந்து வரும் நிலையில், கடந்த 14ம் தேதி, சர்ச் கட்டடம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சர்ச் உறுப்பினர்கள், போலீசில் புகார் அளித்துள்ளனர்.

சர்ச் உறுப்பினர்கள் கூறியதாவது:

சர்ச் நிர்வாகிகள் டெண்டர் ஒதுக்குவதில், ஒருதலைபட்சமாக நடந்து கொண்டனர்.

உறுப்பினர்களின் காணிக்கை மற்றும் வெளியே இருந்து பெறப்பட்ட நன்கொடை உள்ளிட்டவற்றை வீண் விரையமாக்க முயற்சிக்கின்றனர்.

இதுகுறித்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், சட்ட விரோதமாக சர்ச் கட்டடத்தை இடித்துள்ளனர். அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க, ஆவடி போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளோம்.

மேலும், உரிய அனுமதியின்றி கட்டடம் இடிக்கப்பட்டதால், அந்த இடத்திற்கு ‘சீல்’ வைக்க கோரி, சென்னை மாநகராட்சி கமிஷனரிடமும் தெரிவித்துள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *