‘பாக்சர்’ கொலை வழக்கு மேலும் ஐந்து பேர் கைது
சென்னை,திருவல்லிக்கேணி, கஜபதி தெருவைச் சேர்ந்தவர் தனுஷ், 24; குத்துச்சண்டை வீரர். கடந்த, 30ம் தேதி நள்ளிரவு, திருவல்லிக்கேணியைச் சேர்ந்த நண்பர் அருண்குமாருடன், கிருஷ்ணாம்பேட்டை மயான பூமி அருகே நடந்து சென்றார்.
அப்போது, இருசக்கர வாகனங்களில் வந்த அதே பகுதியைச் சேர்ந்த மோகன், 27, அவரது கூட்டாளிகள், தனுஷை ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்தனர். தடுக்க வந்த, தனுஷின் நண்பரின் தலையிலும் வெட்டு விழுந்தது.
வழக்கு பதிந்த ஐஸ்ஹவுஸ் போலீசார், மோகன், செந்தில்குமார், 42, விஷால், 19, சுரேஷ்குமார், 20, ஆகிய நான்கு பேரை, சம்பவம் நடந்த இரண்டு மணி நேரத்திலேயே கைது செய்தனர்.
இக்கொலை வழக்கில் தொடர்புடைய சரண்ராஜ், 21, தீபக், 27, சசிகுமார், 19, விஷால், 20, விஷ்வா, 20, ஆகிய ஐந்து பேரையும், போலீசார் கைது செய்தனர்.