ரவுடிகளின் கூடாரமாகும் மாநகராட்சி மயானம் தகனம் செய்வோரிடம் பணம் பறிப்பதாக புகார்

அண்ணா நகர் மண்டலம், அண்ணா நகர், நியூ ஆவடி சாலையில், சென்னை மாநகராட்சியின், வேலங்காடு மின்மயானம் செயல்படுகிறது. இங்கு, ஐந்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்த சுடுகாடு, ரவுடிகளின் கூடாரமாகவும், சமூக விரோத செயல்களும் அதிகரிப்பதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

இதுகுறித்து, தகனம் செய்ய சென்றவர்கள்கூறியதாவது:

சென்னை மாநகராட்சியால் பராமரிக்கப்படும் வேலங்காடு மின்மயானம், சுத்தமாக உள்ளது. ஆனால், வளாகத்தில், சம்பந்தமே இல்லாத பலர் எந்நேரமும் அமர்ந்து, பணம் வைத்து சூதாடுவது, மது அருந்துவது உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர்.

அருகில் உள்ள அன்னை சத்யா நகர், அயனாவரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் ரவுடியாக வலம் வருவோரின் கூடாரமாக உள்ளது.

உடல்களை தகனம் செய்ய வருவோரிடம், கத்தியை காட்டி பணம் பறிக்கின்றனர். இரவு நேரங்களில் சுவர் ஏறி வந்து, மது அருந்துகின்றனர். சமீபத்தில், கழிப்பறை இரும்பு கதவை திருடி சென்றுள்ளனர்.

இதுகுறித்து, கேட்போருக்கு கொலை மிரட்டல் விடுக்கின்றனர். அண்ணா நகர் போலீசார், சுடுகாட்டில் ரோந்து பணியை தீவிரப்படுத்தி, வளாகத்தில் அத்துமீறி இருப்போரை விரட்ட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *