சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு போட்டிகள்
அம்பத்தூர்: சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு அம்பத்தூர் மேல்நிலைப் பள்ளியில் 2000த்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் முன்னிலையில் அம்பத்தூர் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். சாலை மற்றும் போக்குவரத்து விதிகளை எவ்வாறு கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுரை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாணவ, மாணவர்களிடையே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஓவிய போட்டி, கட்டுரை போட்டி, பேச்சுப்போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அம்பத்தூர் மோட்டார் வாகன ஆய்வாளர் ரமேஷ், போக்குவரத்து போலீஸ் உதவி கமிஷனர் கனகராஜ், இன்ஸ்பெக்டர் பரந்தாமன் மற்றும் பள்ளி ஆசிரியை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்