கூடுதல் ரயில் இயக்க வலியுறுத்தல்
சென்னை: ரயில் உபயோகிப்பாளர்கள் குழுவின், 159வது கூட்டம், சென்னை ரயில்வே கோட்ட தலைமை அலுவலகத்தில், நேற்று நடந்தது. கோட்ட மேலாளர் விஸ்வநாத் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், ரயில் உபயோகிப்பாளர்கள் குழுவினர், தொழில்முனைவோர் உள்ளிட்ட பலரும் பங்கேற்றன
அப்போது, ‘ரயில் நிலையங்களில் லிப்ட், எஸ்கலேட்டர், ‘சிசிடிவி’ நடைமேம்பாலங்கள் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த வேண்டும். அலுவலக நேரங்களில் கூட்ட நெரிசல் அதிகமாக இருப்பதால், கூடுதல் மின்சார, பயணியர் ரயில்களை இயக்க வேண்டும் என, ரயில் உபயோகிப்பாளர்கள் கோரிக்கை வைத்தனர்
படிப்படியாக அமல்படுத்தப்படும், என, சென்னை கோட்ட ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.