கைதியிடம் போன், கஞ்சா பறிமுதல்
புழல், பூந்தமல்லி அடுத்த குமணன்சாவடியைச் சேர்ந்தவர் ஜான் பாஷா என்கிற அன்பரசு. இவர், கடந்த ஏப்ரல் மாதம் திருட்டு வழக்கில், மதுரவாயல் போலீசாரால் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் வேறு ஒரு வழக்கு தொடர்பாக, விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் அன்பரசுவை ஆஜர்படுத்த போலீசார் அழைத்துச் சென்றனர். நேற்று மீண்டும், புழல் சிறைக்கு அழைத்து வந்தனர். அப்போது அவரை சோதனையிட்ட போது, மொபைல் போன் மற்றும் 35 கிராம் கஞ்சா சிக்கியது. புழல் போலீசார் விசாரிக்கின்றனர்.