வீடு புகுந்து திருடியவர் கைது
திருமுல்லைவாயல்திருமுல்லைவாயல், தென்றல் நகர் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபாரதி, 45. இவர், அம்பத்துாரில் பந்தக்கால் கடை வைத்துள்ளார்.
கடந்த 12ம் தேதி திருச்செந்துாருக்கு குடும்பத்துடன் சென்றிருந்தார். 17ம் தேதி, அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவை உடைத்து, 10 சவரன் நகை திருடப்பட்டிருந்தது தெரிந்தது.
இது குறித்து, திருமுல்லைவாயல் போலீசார் விசாரித்து, திருட்டில் ஈடுபட்ட ராமாபுரம், திருமலை நகரைச் சேர்ந்த சக்திவேல், 21, என்பவரை கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.