மெரினாவில் படகு கவிழ்ந்து 2 மீனவர்கள் உயிரிழப்பு
சென்னை, திருவல்லிக்கேணி, நடுக்குப்பத்தைச் சேர்ந்தவர்கள் பாஸ்கர், 61, ராஜி, 35. மீனவர்களான இருவரும், நேற்று அதிகாலை படகில், மெரினாவில் மீன் பிடிக்கச் சென்றனர்.
அப்போது அலையில் சிக்கி, படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவலறிந்த மெரினா போலீசார், கடலில் மாயமானவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே, கடலில் மூழ்கி உயிரிழந்த இருவரது உடலும், விவேகானந்தர் இல்லம் எதிரே கரை ஒதுங்கியது.
இதையடுத்து உடல்கள் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மெரினா போலீசார் விசாரிக்கின்றனர்.