30 கிலோ குட்கா பறிமுதல்
எம்.ஜி.ஆர்., நகர்நெசப்பாக்கம், ஜெய்பாலாஜி நகர் விரிவு காமராஜர் தெருவில், நேற்று முன்தினம் எம்.ஜி.ஆர்.நகர் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அங்கு, அரசால் தடை செய்யப்பட்ட குட்கா வைத்திருந்த நெசப்பாக்கம், காமராஜர் தெருவைச் சேர்ந்த கதிரேசன், 67, என்பவரை கைது செய்தனர்.
அவரிடம் இருந்து, 30 கிலோ குட்கா, ஹான்ஸ் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.