முன் பகையில் வாலிபருக்கு கத்திக்குத்து
பெரம்பூர், செயின்ட் மேரீஸ் சாலையில் வசிப்பவர் கார்த்திக், 26; தனியார் நிறுவன ஊழியர்.
இவரது வீட்டின் அருகே வசிக்கும் பரத், 26, அவரது தம்பி தீபக் ஆகியோர், மூன்று மாதங்களுக்கு முன், தங்களின் ஆட்டோவை, கார்த்திக் வீட்டருகே நிறுத்தி, அதில் அமர்ந்து மது மற்றும் கஞ்சா அடித்துள்ளனர்.
இதை தட்டி கேட்டதால் தகராறு ஏற்பட்டது. செம்பியம் போலீசார், அவர்களை எச்சரித்து அனுப்பினர். இந்நிலையில் நேற்று முன்தினம், செயின்ட் மேரீஸ் சாலையில் சென்று கொண்டிருந்த கார்த்திக்கை வழிமறித்து, பரத் தாக்கியுள்ளார்.
பின், அவரது வீட்டுக்கும் சென்று, கத்தரிகோலால் கார்த்திக் மற்றும் உறவினரான ரவிகுமார் ஆகியோரை தாக்கி, பரத், அவரது கூட்டாளி வினோத் தேவா தப்பி ஓடினார்.
இதுகுறித்த புகாரையடுத்து, செம்பியம் போலீசார், பரத், அவரது நண்பர் வினோத் என்ற தேவா, 28, ஆகியோரை கைது செய்தனர்.