மாநில அளவிலான ‘ஜிம்னாஸ்டிக் ‘ போட்டி சென்னை எஸ்.டி.ஏ.டி., விடுதி முதலிடம்
சென்னை, கல்வித்துறையின் மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டியில், மாணவர்கள் அணி பிரிவில், சென்னை எஸ்.டி.ஏ.டி., விடுதி மாணவர்கள் முதலிடத்தை பிடித்து அசத்தினர்.
சென்னை மாவட்ட பள்ளிக் கல்வித்துறை சார்பில், பாரதியார் தினம் மற்றும் குடியரசு தினத்தையொட்டி, புதிய விளையாட்டு போட்டிகள் நடக்கின்றன.
அந்த வகையில், 2024 – 25ம் ஆண்டிற்கான மாநில அளவில் ஜிம்னாஸ்டிக் போட்டி, நேற்று முன்தினம் வேளச்சேரியில், எஸ்.டி.ஏ.டி., நீச்சல் குள வளாகத்தில் துவங்கி, நான்கு நாட்கள் நடந்தன.
போட்டியில், மாநில முழுதும் இருந்து, சிறுவர்களில், 600 பேரும், சிறுமியரில், 400 பேரும் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர்.
போட்டியில், 14, 17, 19 வயதுக்கு உட்பட்ட இருபாலருக்கும், போட்டிகள் தனித்தனியாக நடத்தப்பட்டன.
முதல் இரண்டு நாட்கள் மாணவியருக்கும், மற்ற இரண்டு நாட்கள் மாணவியருக்கும் நடந்தது.
வெற்றி பெற்றவர்கள்
14 வயது பிரிவு: புளோர் எக்சசைஸ் பிரிவில், செங்கல்பட்டு ரிஷி குமார் முதலிடத்தை பிடித்தார். ‘பொம்மல் ஹார்ஸ், ஸ்டில் ரிங்ஸ், டேபிள் வால்ட், பார்லில் பார்’ ஆகிய பிரிவுகளில், மதுரை விஷ்ணு வரதன் முதலிடங்களை பிடித்தனர்.
அணிபிரிவில், மதுரை முதலிடத்தையும், சென்னை இரண்டாமிடத்தையும், சேலம் மூன்றாம் இடத்தையும் பிடித்தன.
19 வயது பிரிவு: ‘புளோர் எக்சசைஸ்’ பிரிவில் சென்னை பாரதி ராஜ், ‘டேபிள் வால்ட் பிரிவில் சென்னை தினேஷ் குமார், ‘பொம்மல் ஹார்ஸ்’ பிரிவில் சேலம் பிரபஞ்சன் ஆகியோர் முதலிடத்தை பிடித்தனர்.
17 வயது பிரிவு: புளோர் எக்சைஸ், பொம்மன் ஹார்ஸ், டேபிள் வால்ட், பார்லில் பார் மற்றும் ஹாரசான்டல் ஆகிய பிரிவுகளில் செங்கப்பட்டு ஜனக் கவியன் முதலிடத்தை பிடித்தார்.
ஸ்டில் ரிங்ஸ் பிரிவில்,மதுரை அக் ஷயா பிரியன் முதலிடத்தை பிடித்தார்.
அணி பிரிவில், சென்னை எஸ்.டி.ஏ.டி., விடுதி முதலிடத்தையும், மதுரை மற்றும் ஈரோடு இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களை பிடித்தது அசத்தின.