மருத்துவ முகாமில் 100 பேர் பயன்
நங்கநல்லுார்:ஸ்ரீ குருவாயூரப்பன் ஆஸ்திக சமாஜம், பம்மல் சங்கரா கண்மருத்துவமனை, பி,பி.ஜெயின் மருத்துவமனை, அருணா நீரழிவு நோய் மையம் ஆகியவை இணைந்து, இலவச பொது மருத்துவம், நீரழிவு மற்றும் கண் மருத்துவ முகாம் நேற்று நடத்தின.
நங்கநல்லுார், ராம்நகரில் உள்ள நீலகண்டா காம்ப்ளக்சில், நேற்று காலை 6:30 மணி முதல் 10:00 மணி வரை நடத்தப்பட்ட இந்த முகாமில், நுாற்றுக்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர். நீரழிவு பரிசோதனைக்கு வந்தவர்களுக்கு இலவச சிற்றுண்டி வழங்கப்பட்டது.
கண்பரிசோதனை மேற்கொண்டவர்களில் தேவைப்பட்டவர்கள், அறுவை சிகிச்சைக்காக பம்மல் சங்கரா கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், நீரழிவு, ரத்த கொதிப்பு உள்ளிட்ட நோய்களுக்கான மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன.
முன்னதாக, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பணியாற்றி ஓய்வுபெற்ற டாக்டர் பன்னீர்செல்வம் தலைமையில், விழிப்புணர்வு நடைபயிற்சி மேற்கொள்ளப்பட்டது.