ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோருக்கான கண்காட்சி
சென்னை, ஜன. 26: சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோருக்கான மாபெரும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்தை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் நேற்று தொடங்கி வைத்தனர்.
பள்ளி மாணவ, மாணவிகளிடையே காணப்படும் உடல்நலம் குறித்த ரத்தசோகை நோயை கண்டுபிடிக்கும் புதிய தொழில்நுட்ப நலன்அட்டை, லாரி ஓட்டுநரின் வழித்தடங்களில் ஏற்படும் பிரச்னைகள், கட்டணங்கள் தொடர்பான ஆலோசனைகளை தெரிந்து கொள்ளக்கூடிய தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு ஏற்படுத்தக்கூடிய பிரச்னைகளை அலசி ஆராயும் தொழிலநுட்பம் மற்றும் வேர்வை உணவு பொருட்களான கேரட், நெல்லிக்காய், இட்லிபொடி மற்றும் சத்துபாணம் பொருட்களை அறிமுகம் செய்து வைத்தனர்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழக தலைவர் மதிவாணன், எம்எல்ஏக்கள் கிருஷ்ணசாமி, வெங்கடேசன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு செயலாளர் லட்சுமி பிரியா, ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையர் ஆனந்த் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.