டெல்லி குடியரசு தின அணி வகுப்பில் தமிழக கால்நடை விவசாயிகள் பங்கேற்பு
சென்னை, ஜன. 26: கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை செயலாளர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: இன்று டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க ஒன்றிய அரசின் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள துறையால் மாநிலத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ராஷ்டிரிய கோகுல் மிஷனின் கீழ் பல்வேறு திட்டங்களின் பயனாளிகள் மற்றும் அவர்களது வாழ்க்கை துணைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கோபால் ரத்னா விருது வென்றவர்கள், நாடு தழுவிய செயற்கைமுறை கருவூட்டல் திட்டத்தின் கீழ் பயனாளிகள், பாலின பிறிக்கப்பட்ட விந்து கொண்டு செயற்கை கருவூட்டல் திட்டம் மற்றும் கிராமப்புற இந்தியா திட்டத்திற்கான பல்நோக்கு செயற்கை கருவூட்டல் தொழில்நுட்ப பணியாளர்கள் உள்பட மொத்தம் 26 பயனாளிகள் மற்றும் அவர்களது வாழ்க்கை துணைவர்கள் 52 பேர், தமிழ்நாடு மாநிலத்தில் இருந்து பங்கேற்கின்றனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.