மனைவியை தவறாக பேசிய போதை நண்பருக்கு வெட்டு

உள்ளகரம், மடிப்பாக்கம் அடுத்த உள்ளகரம், குபேர முனிசாமி தெருவைச் சேர்ந்தவர் குமரன், 54. இவர், அதே தெருவில் வசிக்கும் தன் நண்பர் நாராயணன், 34, என்பவரின் வீட்டிற்கு, நேற்று முன்தினம் மதியம் சென்றுள்ளார்.

அங்கு இருவரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். போதை அதிகமானபோது, நாராயணன் மனைவி பிரேமலதாவை, குமரன் தவறாக பேசியுள்ளார்.

இதில், வாய்த்தகராறுஏற்பட குமரன் தன் வீட்டிற்கு திரும்பிவிட்டார்.

இந்நிலையில், நாராயணன், அவரது மனைவி பிரேமலதா மற்றும் மைத்துனர்கள் லோகேஷ், 25, மணிகண்டன், 21, ஆகியோர், ஒரு ஆட்டோவில் நேற்று இரவு குமரன் வீட்டிற்கு சென்று குமரனை பட்டாக்கத்தியால் வெட்டி, வீட்டிலுள்ள பொருட்களை சேதப்படுத்தி உள்ளனர்.

அப்போது, பக்கத்து தெருவைச் சேர்ந்த தினேஷ், ஹரி, சுப்பிரமணியன் ஆகியோர் குமரனுக்கு ஆதரவாக பேச வந்துள்ளனர்.

இதில், ஆத்திரம் அடைந்த நாராயணன் தரப்பு, தினேஷ், 23, என்ற கல்லுாரி மாணவரின்இடது நெற்றியில் பட்டாக்கத்தியால் வெட்டி, அங்கிருந்து தப்பினர்.

நாராயணன் மற்றும் அவரது மனைவி பிரேமலதாவை கைது செய்த மடிப்பாக்கம் போலீசார், சோழவரத்தில் பதுங்கியிருந்த நாராயணனனின் மைத்துனர்கள் லோகேஷ், மணிகண்டன் இருவரையும், நேற்று அதிகாலை கைது செய்தனர்.

விசாரணையில், இருவர் மீதும் பல வழக்குகள் இருப்பது தெரியவந்தது. இந்நிலையில், வெட்டுப்பட்ட குமரன், குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.

தினேஷ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *